அண்டத்தில் சூரியனை விட ஒளி வடிவம் வேறில்லை என்பதை நாம் அறிவோம். தன் உன்னத ஒளியால் இந்த உலக உயிர்களைக் காக்கும் இவன் தேர்ந்த கல்விமான். எஞ்சிய எட்டுக் கோள்களுக்கும் தன் ஒளியை வாரி வழங்குபவன். காருகபத்யம் முதலிய மூன்று அக்கினிகளில் சூரியன் தோன்றிய வரலாறு சுவை மிக்கதாகும். படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவன் ஓரு காலத்தில் இருண்ட வடிவமான அண்டத்தைப் படைத்தான். அப்போது அந்த அண்டத்தினின்று பிரகாசமான ஒளியோடு தோன்றியவன் சூரியன். அவன் மும்மூர்திகளின் அமிசமாகத் திகழ்பவன். இப்படித் தோன்றிய சூரியன்இ துவஷ்டாவின் புதல்வியான சஞ்சிகை என்ற பெண்ணை மணந்து அவள் மூலம் வைவச்சுதமனுஇ யமன்இ யமுனைஇ அசுவனி தேவர்கள் என்ற மக்களைப் பெற்றான். சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாத சஞ்சிகை தன்னுடைய சக்தியால் தன் நிழலைத் தன் போன்ற வடிவமாக்கி சூரியனிடம் விட்டுச் சென்று விட்டாள். அந்த நிழல் வடிவ நங்கையே பின்னர் சாயா தேவி எனும் பெயர் பெற்றாள். சாயா தேவிஇ தான் வேறு பெண் எனக் கூறாது சஞ்சிகை போல் சூரியனோடு குடும்பம் நடத்தி வந்தாள். சூரியனும் அவளை உண்மையான சஞ்சிகை என்று உள்ளன்போடு பழகுவானாயினன். சாயா தேவி சூரியன் மூலம் சாவர்ணிமனுஇ சனிபத்திரை என்ற மக்களைப் பெற்றெடுத்தாள். அதன் பின்னர் யமன்இ தன் தந்தையான சூரியனிடம் சாயாதேவி தோன்றிய வரலாற்றை எடுத்துக் கூறவேஇ சூரியன் தன் உண்மையான மனைவியான சஞ்சிகையைத் தேடிச் சென்று கண்டான். கோபம் தணிந்த சஞ்சிகைஇ தன் அன்புக் கணவனான சூரியனுடன் அவனுடைய இருப்பிடத்தை அடைந்தாள். சூரியன் அவ்விருவரையும் தன் தேவராக்கிக் கொண்டு வாழ்த்து வந்தான். சஞ்சிகையை உஷா என்றும் சாயாதேவியை பிரத்யுஷா என்றும் அழைப்பர். சூரியனுக்கு சருஷிணி என்ற மனைவியின் மூலம் பிருகுஇ வால்மீகி என்பவர்கள் தோன்றினர். ஊர்வசி என்ற தேவ மங்கையிடம் காதல் தோன்றியபோது அகத்தியர்இ வசிஷ்டர் முதலியவர்கள் உதித்தனர்.