பலருக்கும் தேவாரம், திருவாசகம் தெரிந்திருக்கும் அளவிற்குத் திருமந்திரம் தெரிந்திருக்கும் என்பதற்கில்லை. சைவ வட்டாரம் அறிந்திருக்கலாமே ஒழிய, பொதுநிலையில் திருமந்திரம் பரவலாக அறியப்பட்ட நூல் என்று சொல்ல முடியாது. சைவ மரபுமேகூடத் தேவாரம், திருவாசகம், பெரிய புராணத்தைப் போற்றிய அளவிற்குத் திருமந்திரத்தைப் போற்றிற்று என்று சொல்லத் தயக்கமாகவே உள்ளது. நல்லது. என்ன வகையான நூல் இந்தத் திருமந்திரம்?????