தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு யம தீப திரயோதசி என்று பெயர்.

அன்று மாலை யமதர்மராஜாவைக் குறித்து வீட்டுக்கு வெளியே மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்குகளை ஏற்ற இது அபம்ருத்யு ( ஆக்ஸிடெண்ட், நோய் ) தோஷத்தைப் போக்கும். நீண்ட ஆயுள் தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.

ஸங்கல்பம் :

மம ஸர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீபதானம் கரிஷ்யே.

என சொல்லி வீட்டில் எத்தனை பேர் உள்ளனரோ தலா ஒவ்வொரு விளக்கு வீதம் அவர்களை கொண்டே ஏற்றி வைக்கச் சொல்ல வேண்டும்.

பின் பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டிய ஶ்லோகம்.

ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேன ஶ்யாமயா ஸஹ த்ரயோதஶ்யாம் திப தானாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம

அர்த்தம் பாசம், தண்டம் இவைகளை கையில் ஏந்திக் கொண்டு ஶ்யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் ஸூர்யனின் புத்ரரான யமதர்மராஜாவானவர் நான் செய்யும் இந்த திரயோதசி தீப தானத்தால் ஸந்தோஷமடையட்டும் .

( ஸ்ரீபாலாஜி வாத்யார்)